சசிகலா புஷ்பா ராஜினாமா... தூத்துக்குடி மேயர் பொறுப்பை ஏற்றார் துணை மேயர் சேவியர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்து வந்த சசிகலா புஷ்பா, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவுள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மேயர் பொறுப்பை துணைமேயர் சேவியர் ஏற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக இருந்த சசிகலா புஷ்பா அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று மாலை தான் வகித்து வந்த தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவியை சசிகலா புஷ்பா ராஜினாமா செய்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று மதியம் மாநகராட்சி ஆணையர் மதுமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பாவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக (பொறுப்பு) துணை மேயர் சேவியர் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சின்னத்துரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்த சின்னத்துரையின் ராஜினாமா ஏற்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்தின் துணைத்தலைவராக இருந்த தெய்வேந்திரன் ஊராட்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications