வாக்குச்சாவடி முன் பிரசாரம்… கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் வாக்கு சாவடி முன்பு அதிமுகவினர் பிரச்சாரம் செய்தாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருந்தது மற்ற கட்சியினரை கொதிப்படைய வைத்தது
பணப்பட்டுவாடா
தூத்துக்குடி தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் பணம் வழங்கப்பட்டது. அரசு உயர் அதிகாரிகள் கூட சுய உதவி பெண்களை கூட்டம் என்று கூறி வரவழைத்து அவர்களுக்கு கடன் உதவி, மானியம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
மேலும் அதற்கு பிரதி பலனாக குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கலெக்டர் தலைமையில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் கலெக்டர் தலைமையிலேயே இது போன்ற ஒரு பிரச்சார கூட்டம் நடந்துள்ளது.
ஆனால் அதிகாரிகளோ, உளவுதுறையினரோ இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் வாக்கு பதிவுக்கு முதல் நாள் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்துள்ளனர். இதனை பல்வேறு கட்சியினர் வீடியோ பதிவு செய்து பறக்கும் படையினரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் சுத்தமாக கண்டுகொள்ளாமல் குறட்டை விட்டதால் வாக்கு பதிவு நாளான நேற்று அதிகாலை முதலே வாக்கு பதிவு மையங்கள் முன்பு நின்று கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் இரண்டு விரல்களை காட்டி கடைசி நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து எதுவும் தெரியாதது போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் செல்போனில் சுவராசியமாக பேசி கொண்டிருந்தனர். விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் மாவட்டத்தின் பெரும்பாலான டாஸ்மாக் பார்களிலும், அவற்றின் அருகே உள்ள சிறிய கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை கனஜோராக நடந்தது. இதையும் அதிகாரிகளோ, போலீசாரோ கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications