பாளை சிறையில் அமெரிக்க கப்பல் கேப்டன் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல் கேப்டன் மீண்டும் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அமெரிக்க ஆயுதக் கப்பல் கடந்த 11ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகம் அருகே அனுமதியின்றி நுழைந்ததால், இந்திய கடலோர காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்டது.

கப்பலில் இருந்த 35 ஊழியர்களில் 33 பேர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கப்பல் பராமரிப்பு பணிக்காக அதன் கேப்டன் மற்றும் தலைமை பொறியாளர் சிறையில் அடைக்கப்படவில்லை.
ஆனால் அவர்கள் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கப்பல் கேப்டன் மீண்டும் சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications