தற்கொலைக்கு முயற்சித்ததைத் தொடர்ந்தே அமெரிக்க கப்பல் பொறியாளர் கைது!
தூத்துக்குடி: அமெரிக்க கப்பலின் தலைமைப் பொறியாளரான உக்ரைனைச் சேர்ந்த சிடோரன் கோவலரி, கப்பலில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள விஷயம் வெளியில் வந்துள்ளது. அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திக் காத்துள்ளனர்.
அமெரிக்க தனியார் நிறுவனத்தின் பாதுகாப்புக் கப்பலான எம்.வி. சீமன் கார்ட் ஓஹியோ, தூத்துக்குடி அருகே அத்துமீறி இந்திய பகுதிக்குள் வந்தது தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இருந்த 35 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். முதலில் 33 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு கப்பலை வி்ட்டு அகற்றப்பட்டனர். கேப்டன் டுட்னிக் வாலரின், தலைமைப் பொறியாளர் கோவலரி ஆகியோர் மட்டும் பராமரிப்புக்காக விட்டு வைக்கப்பட்டனர்.
கப்பலில் பாதுகாப்புக்காக மத்திய தொழிலக படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவலரி, கப்பலில் உள்ள கொடிக் கம்பத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் தொழிலக பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றி விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே கியூ பிரிவு போலீஸார் கப்பலுக்கு விரைந்து சென்று கோவலரி மற்றும் வாலரின் ஆகிய இருவரையும் கைது செய்து கரைக்குக் கொண்டு வந்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications