தர்மபுரி: வீட்டில் வெடிபொருள் பதுக்கியதாக 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக வெடி பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒன்றாம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காட்டுமாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த சுமார் 300 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே தர்மபுரியில் சுமார் 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவிய தவறான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications