மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
மதுரை: மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆடி வீதியில் அலங்கார பந்தலில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 10ம் நாளான இன்று மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

சுப்ரமணியரும், பெருமாளும்
திருக்கல்யாணத்தையொட்டி காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினர்.

சொக்கநாதர் மீனாட்சி
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அலங்கார மேடையில் திருக்கல்யாணம்
தொடர்ந்து காலை 9.51 மணிக்கு மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதர் எழுந்தருளினார். பின்னர் பிரியாவிடை அம்மனுடன், சர்வ அலங்காரத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன் மணமேடையில் எழுந்தருளினார்.

வைரக்கல் திருமாங்கல்யம்
காலை 10.47 மணிக்கு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வைரக்கல் பதித்த திருமாங்கல்யம் மீனாட்சிக்கும், பிறகு பிரியாவிடைக்கு அணிவிக்கப்பட்டது.

புதுத்தாலி மாற்றிய பெண்கள்
மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் கட்டப்பட்ட நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது திருமாங்கல்ய கயிறுகளை மாற்றிக் கொண்டனர்.

மொய் எழுதிய பக்தர்கள்
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் பக்தர்கள் மீனாட்சி அம்மனுக்கு மொய் எழுதினர்.

தாலி கொடுத்த பக்தர்கள்
தங்கள் வீட்டுப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று மீனாட்சி அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்களுக்கு தாலியும் மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுத்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம்
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் கோயில் சார்பில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தையொட்டி மதுரையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சித்திரை தேரோட்டம்
ஞாயிறு காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 4 மாசி வீதிகளில் தேர் உலா வந்து பக்தர்களுக்கு சுவாமியும், அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications