"ஃபுல் ஃபோர்ஸ்".. ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி சைலேந்திரபாபு.. தமிழ்நாடு போலீஸில் வேலை? மேஜர் தகவல்
ஊட்டி: பழங்குடியினரின் ஜாதி சான்றிதழ் சரி பார்ப்பது தொடர்பாக, 2,600 மனுக்கள் பெறப்பட்டு, 2,000 சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது என்று டிஜிபி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. அத்துடன், காவல்துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும் டிஜிபி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் குறித்து தமிழக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீசாருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது...

அண்ணாதுரை வரவேற்பு:
இதனை டிஜிபி சைலேந்திரபாபு, நீலகிரி மாவட்டம் ஊட்டி பாலாடாவில் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் நலத்துறை ஆணையாளர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார்
பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்நாடு காவல்துறை சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு 2 நாட்கள் திறன் வளர்ப்பு மற்றும் பழங்குடியினர் சான்றிதழ்களை சரிபார்க்கும் பயிற்சி வகுப்பு ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் தொடங்கியது... 37 மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் மற்றும் ஒன்பது மாநகர கமிஷனர்களுக்கான நிகழ்ச்சி இதுவாகும்..
சைலேந்திர பாபு:
இதனை டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்து பேசும்போது, ''ஊட்டியில் கோடை விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் பின்னணியில், நீலகிரி மாவட்டத்தில் சீசனுக்காக 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் கண்டறியப்பட்டன, இது வாகன நெரிசலைக் குறைக்க உதவி வருகிறது. ஊட்டி மற்றும் குன்னூரில் போக்குவரத்தை சீரமைக்க, "மலை போலீசார்" ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்..

காவல் நிலையங்களில் புகார்களைப் பெறவும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் 3 மாத பயிற்சிக்குப் பிறகு 2,300 வரவேற்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த வருடம் மாநிலத்தில் பல்வேறு பிரச்சனை தொடர்பாக, 9.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதுகுறித்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.. தமிழகத்தில் 1.2 சதவீத பழங்குடியினர் இருக்கிறார்கள்.. 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. அவைகளின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை யும் எடுக்கப்பட்டுள்ளது..
சாதி சான்றிதழ்: சாதி சான்றிதழ் சரி பார்ப்பது தொடர்பாக, 2,600 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.. இவைகளில் மொத்தம் 2,000 சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது... இதன்மூலம், பழங்குடியின மாணவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கும், அரசு வேலைகளில் சேரவும், வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.. போட்டித் தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு வேலை கிடைக்க வழி வகுக்கும்..
காவல் துறை முழு திறனுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக முழுமையாக காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன... தமிழகத்தில் கடந்த ஆண்டு 10,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், மேலும் 3,500 காவலர்கள் பயிற்சி பெற்று 2,500 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்..

முழு பலம்:
1000 பேர் காவல்துறையில் பயிற்சி பெற்று வேலையில் சேர்ந்துள்ளனர்.. 600 சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் உள்ளன.. இப்போதைய சூழலில், காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இல்லை.. 6 மாத கழித்து தான் காலிப்பணியிடங்கள் வரும். ஆனால், காவல்துறையில் முதல்முறையாக முழுபலமும் இருக்கக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது' என்று பெருமிதம் தெரிவித்தார் டிஜிபி..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications