Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச வீடியோ இருப்பதாக.. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய 3 பேருக்கு ஜாமீன்.. மயிலாடுதுறை கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் 3 பேருக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரது சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டது.

Dharmapuram Adheenam threaten Case Mayiladuthurai courts gives bail to 3 man who arrested by police


அந்த புகாரில், தர்மபுரம் ஆதீனம் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது ‛‛ஆபாச வீடியோ இருப்பதாகவும், பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும் தர்மபுரம் ஆதீனத்தை வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோரின் தூண்டுதல் தான் காரணம்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி விசாரித்த போலீசார் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(32), சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவராக செயல்பட்ட அகோரமும் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில் தான் ஆபாச ஆடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான நபர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் கோரி வந்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இந்நிலையில் தான் வினோத், விக்னேஷ், குடியரசு ஆகிய மூவரும் மீண்டும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். இந்த மனு மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி கலைவாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் ஜாமீன் காலத்தில் அவர்கள் தினந்தோறும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உள்ளார். இருப்பினம் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவரான அகோரம் இன்னும் சிறையிலேயே உள்ளார். அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+