தர்மபுரி கோவிந்தம்மாளுக்கு கறிக்கடையில் பூத்த காதல்.. நொந்து போய் சேர்ந்த மட்டன் கடைக்காரர்.. தேவையா
தர்மபுரி: தர்மபுரி நபரின் வாழ்க்கையே இன்று காலியாகிவிட்டது.. பாலக்கோடு பெண்ணின் மோசமான எண்ணத்தினாலும், தகாத உறவினாலும் ஒரு அப்பாவி உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர். 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.. என்ன நடந்தது, பாலக்கோடு பஸ் ஸ்டாண்டு அருகில்?
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது கொரவன் திண்ணை கிராமம்.. இங்கு வசித்து வருபவர் குமார்.. இவருக்கு 41 வயதாகிறது.. பாலக்கோடு அரசு பஸ் ஸ்டாண்டு அருகில் மட்டன் கடை வைத்திருக்கிறார்.. அத்துடன் பழைய இரும்பு கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.. இதற்காக பாலக்கோடு எர்ரனஅள்ளி கிராமத்திலேயே வசித்து வந்தார்.

இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்துவிட்டார்.. எனவே, பாலக்கோடு எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. கணவருடன் சேர்ந்து மட்டன் கடையை கவனித்து கொண்டார் கோவிந்தம்மாள்.
கள்ளத்தொடர்பு
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கோவிந்தம்மாளுக்கும், தனியார் நிதி நிறுவன ஊழியரான நாகராஜ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.. கோவிந்தம்மாளுக்கு 36 வயதாகிறது.. நாகராஜூக்கு 27 வயதாகிறது.
இரும்பு வியாபாரம் தொடர்பாக குமார் வெளியில் சென்றால், அப்போது நாகராஜை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் கோவிந்தம்மாள்.. இந்த விஷயம் குமாருக்கு தெரிந்து கண்டித்துள்ளார்... கள்ள உறவை கைவிடுமாறு சொல்லியும், கோவிந்தம்மாள் கேட்கவில்லை.. கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட தம்பதிக்குள் இது தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, குமார் ஆத்திரத்தில் கோவிந்தம்மாளை கடுமையாக தாக்கினார். இதையே சாக்காக எடுத்து கொண்டு கோவிந்தம்மாள், தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
திடீரென்று இறந்த கணவர்
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 9ம் தேதி குமார் சடலமாக கிடந்தார்.. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், பிரிந்து வாழும் கோவிந்தம்மாள் மீது சந்தேகம் வந்தது.. உடனே கோவிந்தம்மாளிடம் விசாரணை நடத்தியபோதுதான், நாகராஜுடனான கள்ளக்காதல் அம்பலமானது.
கோவிந்தம்மாள் போலீசில் தந்த வாக்குமூலத்தில், "நாகராஜுடனான உறவை என்னால் துண்டிக்க முடியவில்லை.. ஆனால், உறவை கைவிடும்படி, என்னுடைய கணவர் குமார் கண்டித்து எனக்கு ஆத்திரத்தை தந்தது. அதனால், கணவரை கொலை செய்து விட்டு, கறிக்கடை, இரும்பு கடையை அபகரித்து நாகராஜுடன் உல்லாசமாக வாழலாம் என்று முடிவு செய்தேன்.

கறிக்கடையில் கொடுமை
கடந்த 8ம் தேதி இரவு 11 மணிக்கு நாகராஜ், அவரது கூட்டாளிகளான சொன்னம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (27), சாமியார் கொட்டாய் தமிழரசன் (25) ஆகியோர் கொலை செய்வதற்காக வந்தார்கள்.. கறிக்கடையில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த கணவரின் கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டு தலையணையை முகத்தில் வைத்து அமுக்கினார்கள்.. அப்போதும் உயிர் போகாததால், கயிற்றால் கழுத்தை இறுக்கியதில், அவர் துடிதுடித்து இறந்துவிட்டார்" என்றார்.
இந்த வாக்குமூலத்தையடுத்து, தலைமறைவாக இருந்த நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் ஆகியோரை பிடித்த போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். அப்போது சேலம் சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications