இன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய மனைவி!
கணவன் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக அவரை கொன்றுவிட்டு மனைவியே நாடகமாடியது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

தர்மபுரி: கணவன் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தருமபுரி அருகே நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் மாதேசன். இவர் தேன்கனிக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 27ம் தேதி மாதேசன் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் இறந்து கிடந்தார்.
மாதேசன் விபத்தில் இறந்ததாகக் கருதி போலீசார் முதலில் இதனை விபத்து வழக்காக விசாரித்தனர். மாதேசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு வந்த மாதேசனின் மனைவி ரேவதி கணவன் இறந்த செய்தி கேட்டு கதறி அழாமல் போலீசாரிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டுள்ளார்.

இறப்பு சான்றிதழ் கேட்டு வந்த மகன்
இதனால் ரேவதி மீது சந்தேமடைந்த போலீசார் காரிமங்கலம் காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ரேவதியை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே ரேவதியின் மூத்த மகன் 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று மாதேசனின் இறப்பு சான்றிதழை கேட்டுள்ளார்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
தந்தை இறந்த 1 வாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கேட்ட மாதேசனின் மகன் யோகேஷ் மீது பணியில் இருந்த போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து யோகேஷையும், ரேவதியையும் அழைத்து காரிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் செய்திகள் வெளியாகின.

லட்சக்கணக்கில் இன்சூரன்ஸ்
மாதேசனுக்கு குடிப்பழக்கத்துடன் உடல்நலக்குறைவும் இருந்தது. அவர் விரைவில் இறந்துவிட வாய்ப்புள்ளதாக கருதி அரசு இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ. 10 லட்சத்திற்கும், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ. 45 லட்சம் மதிப்பில் ஒரு பாலிசியும் கணவர் பெயரில் எடுத்துள்ளார் ரேவதி. இந்த பாலிசிகளுக்கு வாரிசாக தன்னை சேர்த்துள்ளார் ரேவதி.

மனைவி கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன்
ரேவதிக்கும், ஜெயபிரகாஷ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதை அறிந்து மாதேசன் கண்டித்துள்ளார். இதனால் ஜெயப்பிரகாஷ், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரேவதி திட்டமிட்டு மாதேசனை கொலை செய்துள்ளார்.

கொலையில் தொடர்புடையவர்கள் கைது
கடந்த 27ம் தேதி மாதேசனை கழுத்தை நெரித்து கொன்று தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் உடலை வீசிவிட்டு வந்துள்ளனர். ரேவதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன் மற்றும் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேவதியிடமும், யோகேஷிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications