Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛எதிர்ப்புக்கு நடுவே பட்டண பிரவேசம்’’.. பக்தர்கள் சுமக்க பல்லக்கில் வலம் வரும் தருமை ஆதீன மடாதிபதி

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: கடும் எதிர்ப்புக்கு நடுவே மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் இருக்க பக்தர்கள் அவரை சுமந்து 4 வீதிகளில் வலம் வருகின்றனர்.

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமையான தருமபுர ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான வைகாசியில் 10 நாட்கள் குருபூஜை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருபூஜை கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

mayiladuthurai

இந்த குருபூஜையின்போது மடத்தில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை உடனுறை ஸ்ரீஞானபுரீஸ்வரர் சவாமி கோவிலில் தினமும் விழா நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தேரோட்டம் தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்தின் 4 ரத விதிகளில் தேரோட்டம் நடந்தது.

இந்நிலையில் தான் விழாவில் மனக்கிய நிகழ்ச்சியான பட்டண பிரவேச நிகழ்ச்சி இன்று தொடங்கி நடந்து வருகிறது. தருமபுர ஆதீன மடாதிபதியான ஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானேஸ்வர் சுவாமிகள் ஆபரணங்கள் பூண்டு சிவிகை பல்லக்கில் அமர பக்தர்கள் அவரை சுமந்து செல்கின்றனர். பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே சிவிகை பல்லக்கு நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பப்படுகிறது.

பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆதீனங்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக ஆதினம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து சென்றனர். அங்கு யானைகளைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் பட்டண பிரவேச நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மனிதனை மனிதனே சுமக்க கூடாது. இதனால் பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் எதிர்ப்புக்கு நடுவே தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+