கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தள்ளுமுள்ளில் சிக்கிய தயாநிதி மாறன்!
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவர் மீட்டனர்.
கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏராளமாோர் அஞ்சலி செலுத்த அதிகாலை முதலே காத்து கிடந்தனர்.

இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கவே போலீஸாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. இதனிடையே தொண்டர்கள் விஐபிக்கள் வரும் வழியில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து கருணாநிதியின் முகத்தை பார்க்க சென்றனர்.
இதனால் பரபரப்பும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. கருணாநிதியின் உடல் அருகே ஏராளமானோர் குவிந்ததால் அங்கு போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிக்கினார்.
இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு உரிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications