அடிபொலி.. டோணி மகள் ஜிவாவின் அடுத்த கலக்கல் பாருங்க!
இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவாவின் அடுத்த மலையாளப் பாடல் ரீலிஸாகியுள்ளது.
Recommended Video

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவாவின் அடுத்த மலையாளப் பாடல் ரிலீஸாகியுள்ளது. கனிகாணும் நேரம் கமல நேத்ரந்தே என்றும் மலையாளத்தில் அவர் பாடும் பாடல் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ என்றால் அதில் முதல் இடம் பிடிப்பது இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் குடும்பம். டோணி ஒரு பக்கம் ஜாலியாக டான்ஸ் ஆடுவது, மனைவி அதனை ரசிப்பது என்று வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் போட்டு லைக்ஸ் அள்ளுகிறார்.
அவர் மகள் வா அவரை விட 16 அடி பாய்ந்து கால்பந்து மைதானத்தில் அப்பாவுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது. இந்திய கேப்டன் விராட் கோலியுடன் கேஷீவலாக பேசுவது என்று அவர் அதற்கு மேல் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
ஜிவாவின் முதல் பாட்டு
கடந்த அக்டோபர் மாதத்தில் டோணியின் 2 வயது மகள் ஸிவா மலையாளத்தில் கிருஷ்ணனை போற்றும் "அம்பலப்புழா உன்னிக் கண்ணணோடு நீ" என்ற பாடலைப் பாடியிருந்தார். 1992ம் ஆண்டில் அத்வைத்யம் என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பல பாடகர்களின் குரல்களில் கிருஷ்ணன் துதிப் பாடலாக பாடப்பட்டுள்ளது.

பெரும் வரவேற்பு
ஜிவாவின் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அம்பலப்புழா கிருஷ்ணன் கோவிலில் ஜனவரி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்குமாறு ஜிவாவிற்கு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜிவா குரலில் மற்றொரு பாடல்
இதனிடையே ஜிவாவின் குரலில் மற்றொரு மலையாள மெட்டுப் பாடல் வெளியாகியுள்ளது. 'கனிகாணும் நேரம் கமல நேத்ரந்தே' என்று தொடங்கும் அந்தப் பாடலின் சுமார் 8 வரிகளை தன்னுடைய டேபை பார்த்து அழகாகப் பாடுகிறார் ஜிவா.

குருவாயூர் கிருஷ்ணன் பாடல்
1964ம் ஆண்டு ஓமனக்குட்டன் என்ற மலையாளப் படத்தில் வரும் இந்தப் பாடலை வயலார் என்பவர் எழுதியுள்ளார். இந்தப் பாடலும் குருவாயூர் கிருஷ்ணனின் துதித்துப் பாடும் பிரபல இறை பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications