அரண்ட தென்காசி..டபக்னு நிர்வாணமாக கடையில் நுழைந்து, சங்கரன்கோவிலுக்கே விபூதி அடித்து, யார்னு பாருங்க
நெல்லை: ஒரு சாமியார் வடக்கில் இருந்து, நம்ம ஊருக்கு வந்துபோயுள்ளார்.. அதுவும் சங்கரன்கோயிலுக்கு வந்துள்ளார்.. அங்கு நடந்த ஒரு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் ரோட்டில், தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஒருவர் தமிழகத்துக்கு வந்துள்ளார்.. இவர் ஒரு நிர்வாண சாமியார்.

புனித யாத்திரை: 30 நாள் புனித யாத்திரையாக இங்கு கிளம்பி வந்துள்ளார்.. ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கெல்லாம் சென்றுவிட்டு, போகிற வழியில் சங்கரன்கோவில் வந்திருரக்கிறார்.. அப்போது ராஜபாளையம் ரோட்டில் இருக்கும் அந்த தனியார் நகைக்கடைக்குள்ளே போனார் நிர்வாண சாமியார்..
அந்த ஓனரிடம் "ஹரித்துவாரில் இருந்து யாத்திரைக்கு வருகிறேன்.. இந்த பகுதியை கடக்க முயன்றேன்.. அப்பதான் திடீரென எனக்கு கடவுள் என்னிடம் வந்து அருள்வாக்கு சொன்னார்.. அதில், இந்த நகைக்கடைக்கு போய்ட்டு வா.. அங்கே கடையில் இருப்பவர்களை எல்லாம் ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என்று சொன்னார்.. அதனால்தான், இந்த கடைக்கு உங்களை எல்லாம் ஆசீர்வாதம் செய்வதற்காக வந்திருக்கிறேன்" என்றார்..
கடை ஓனர்: இதைக்கேட்டதும் ஓனரும், கடை ஊழியர்களும் என்ன செய்வதென அறியாமல் திகைத்து நின்றனர். அதிலும் ஓனர், தலைகால் புரியாமல் திக்குமுக்காடிப்போனார்.. பிறகு, அந்த சாமியாரை, கையெடுத்து கும்பிட்டு, வரவேற்று உட்கார வைத்தார்.. அங்கிருந்தவர்கள் எல்லாரும், நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.. அப்போது கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிசெலவுக்காக சிறிய ஒரு தொகையை கவருக்குள் வைத்து, அன்பளிப்பாக தந்திருக்கிறார்.
அதை வாங்கி கொண்ட அந்த நிர்வாண சாமியார், "இது என்னுடைய பூஜைக்கு மட்டுமே உண்டான செலவு, என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ இந்த ஊரிலேயே மிகப்பெரிய ஆளாய் வருவாய்" என்றார்..
நிர்வாண சாமியார்: இதைக்கேட்டதும், ஓனருக்கு குழப்பமாக இருந்திருக்கிறது.. ஆனால், சாமியாரோ, கடையின் நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? அங்கே என்னை அழைத்து செல் என்று கேட்டுள்ளார். ஓனரும் அங்கே அழைத்து சென்றுள்ளார்.. அங்கு போனதுமே, நிர்வாண சாமியார் ஓனரின் தலையில் கை வைத்து மறுபடியும் ஆசீர்வாதம் செய்துள்ளார்..
பிறகு, சாமியார், என் கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் சொல்லி, ஓனரிடம் கேட்க சொல்லி உள்ளார்.. இதை கேட்டதுமே ஓனர் உட்பட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இருந்தாலும், ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்துள்ளார்.. அந்த செயினை பார்த்த சாமியார், அந்த செயின் வேண்டாம், இன்னும் பெரிசா செயின் எடுங்கள் என்று கூறியதுடன், பெரிய செயின் ஒன்றை சுட்டிக்காட்டி உள்ளார்.

கஸ்டமர்: ஆனால் ஓனரோ, "அந்த செயினுக்கு, ஏற்கனவே ஒரு கஸ்டமர் ஆர்டர் தந்திருக்கிறார். அதனால், இதையே அன்பளிப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறி, அந்த ஒரு பவுன் சங்கிலியை, நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிந்திருக்கிறார்.. அதற்கு பிறகு அந்த சாமியார் கிளம்பி போய்விட்டாராம்.. இந்த சம்பவம்தான் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிர்வாண சாமியார் காசு, பணத்தை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்? அவர் நிஜமாகவே எங்கிருந்து வந்தார்? எங்கே போகிறார்? எதுவுமே தெரியவில்லை. நிர்வாணமாக இப்படி திரிபவர்களை அகோரிகள் என்பார்கள்.
திடீரென்று நகைக்கடைக்கு நுழைந்ததுடன், தன்னை காண திரண்டு வந்த பொதுமக்களுக்கும் ஆசி என்ற பெயரில் விபூதி "அடித்துவிட்டு" போயிருக்கிறார்.. அத்துடன், கை நிறைய பணம் + கழுத்தில் செயினுடனும் கிளம்பி போயிருக்கிறார் "முற்றும் துறந்த" அந்த நிர்வாண சாமியார்..!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications