ரொம்ப முக்கியம்! பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று விட்டீர்களா? கடைசி வாய்ப்பு.. உடனே போங்க
மன்னார்குடி: மன்னார்குடி நகராட்சியில் பெயருடன் கூடிய பிறப்பு சான்று வாங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிறப்பு சான்றிதழ்களை வாங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான இறுதி நாள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஜனவரி 1 2000க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2000க்கு பின் பிறந்து 15 வருடமாக பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்களுக்கும் இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் மன்னார்குடி நகராட்சியில் பெயருடன் கூடிய பிறப்பு சான்று வாங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், 15 வயது நிரம்பியவரா நீங்கள்? பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று விட்டீர்களா? கடைசி வாய்ப்பு, உடனே போங்க...
குழந்தை பிறந்த 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யாப்படாத நிகழ்வுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டு உள்ளது.
எப்படி செய்வது?: கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்.
அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன் லோடு செய்ய முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுப்பார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள். இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும்.
இது போக.. பாலினம், வயது , ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் . இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இந்த பிறப்பு சான்றிதழை கிளிக் செய்து உடனே டவுன் லோடு செய்ய முடியும்.
அடையாள ஆவணம்; இந்த நிலையில்தான் நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications