நம்பியாருக்கும் வீரப்பாவுக்கும் மக்கள் வாக்களிப்பார்களா?.. தினகரன் கல கல...
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் நம்பியாருக்கும் வீரப்பாவுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்று திநகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

மதுரை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்.என். நம்பியாருக்கும், பி.எஸ். வீரப்பாவுக்கும் மக்கள் வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன இடையே கடும் போட்டி நிலவியது. ஒருவர் மாற்றி ஒருவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என பிரசாரம் செய்து வந்தனர்.

டிடிவி முன்னிலை
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மக்கள் முடிவு
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் விரோத துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

ஜெ.வுக்கு அடுத்து
எங்கள் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக என்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்துவிட்டனர்.

எண்ணம் பிரதிபலிப்பு
கேரளத்தில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெற வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். 3 மாதத்தில் ஆட்சி கவிழப் போகிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 7.5 கோடி மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர்.

முக்கியம் அல்ல
எம்என் நம்பியாருக்கும், பிஎஸ் வீரப்பாவுக்கும் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். சின்னமும், கட்சியும் யாரிடம் இருப்பது என்பது முக்கியம் அல்ல என்று தினகரன் தெரிவித்தார். ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸை நம்பியார், வீரப்பா போன்ற வில்லன்கள் என்று தினகரன் சாடியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications