லஞ்ச விவகாரம்: டெல்லி காவல்துறை முன் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்கும் தினகரன் !
டெல்லி போலீசாரிடம் நேரில் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரில் சிக்கியுள்ள தினகரன் டெல்லி போலீஸ் முன் ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாணையில் டிடிவி தினகரனிடம் இருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார். இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து சுகேஷ் சந்திரகேரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை வந்த டெல்லி போலீசார், நேற்றிரவு சுமார் 11 மணி அளவில், அடையாறில் உள்ள டிடிவி தினகரினின் வீட்டிற்குச் சென்று அவரிடம் சம்மனை வழங்கினர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் கேட்டுக் கொண்டனர். அந்த சம்மனில் வரும் சனிக்கிழமை, டெல்லியில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை முன் ஆஜராக, மூன்று நாள் அவகாசம் கேட்டு டி.டி.வி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications