தினகரனுக்கு "விசிலடித்த" மக்கள்... வீடு, ராணி மேரி கல்லூரி முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முன்னிலை வகித்து வருவதால் அவரது வீடு மற்றும் ராணி மேரி கல்லூரி முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினகரனுக்கு 'விசிலடித்த' மக்கள்- வீடியோ

    சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன்
    தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

    கடந்த 21-ஆம் தேதி ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற கேள்வியுடன் இனிதே நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் இன்று ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் அதிமுக 4,521 வாக்குகளும், திமுக 2,383 வாக்குகளும், தினகரன் 1891 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி முன்னேற்றம்

    நாம் தமிழர் கட்சி முன்னேற்றம்

    கலைகோட்டுதயம் 258 வாக்குகளையும் பாஜகவின் கரு நாகராஜன் 66 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளனர். இதன் மூலம் நாம் தமிழர் கட்சி முன்னேற்றம் அடைந்துள்ளதும், பாஜகவின் கரு நாகராஜன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது.

    அதிமுக ரகளை

    அதிமுக ரகளை

    இதில் டிடிவி தினகரன் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிமுகவினர் ரகளை ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தப்பட்டது.

    ஆதரவு கோஷம்

    ஆதரவு கோஷம்

    சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கள நிலவரம் தொடர்ந்து தினகரனுக்கு சாதகமாகவே இருப்பதால் தினகரனின் அடையாறு வீடு முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மகிழ்ச்சியில் திளைப்பு

    மகிழ்ச்சியில் திளைப்பு

    அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் ராணி மேரி கல்லூரி முன்பும் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து கொண்டு தினகரனுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். சுயேச்சை வேட்பாளரிடம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் தினகரன் ஆதரவாளர்கள் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+