திருப்பரங்குன்றம் ஜெ.வின் கோட்டை... அதிமுக நிச்சயம் தோற்கும்... தினகரன் ஆரூடம்
Recommended Video

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஜெயலலிதாவின் கோட்டை என்பதால் அதிமுக இங்கு தோற்கும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் கருணாநிதியும் மரணமடைந்ததால் அவர் எம்எல்ஏவாக பதவி வகித்த திருவாரூர் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும்.

போட்டி போடும் கட்சிகள்
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்ற வரலாற்றை மாற்றி காண்பித்தவர் தினகரன். இவர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சமஉ-வாகி உள்ளார். இதுவே ஆளும்கட்சிக்கும், டெபாசிட் இழந்த திமுகவுக்கும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

திமுக நம்பிக்கை
இதனால் இந்த தேர்தல்களில் எப்படியாயினும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டு கொண்டு வெற்றி பெற போராடுவர் என்றே தெரிகிறது. திருவாரூர் திமுகவின் கோட்டை என்பதால் எப்படியும் அங்கு வெற்றி பெற்று விடுவோம் என்று திமுக நம்புகிறது.

செல்வாக்கு தெரிந்து கொள்ள...
கருணாநிதி இல்லாத நிலையில் ஏற்கெனவே அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை தங்களுக்கு சாதமாக அனுதாப ஓட்டுக்களாக அள்ள திமுக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தினகரனோ தங்கள் கட்சிதான் இரு இடை தேர்தல்களிலும் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்.

நீர் நிலைகள்
இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கூறுகையில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், துரோகிகள் ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்ததை போல திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இழப்பார்கள். அது ஜெயலலிதாவின் கோட்டை.

உள்கட்சி பிரச்சினை
திமுகவில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிச்சனை அது பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது. அடுத்தாண்டு அம்மாவின் ஆட்சி அமைத்தவுடன், நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். நதிநீர் இணைப்புகள், தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும். கருணாநிதி முதல்வராக இருந்ததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம், அவரை நீக்கியப் பிறகே தான் அதிமுக தோன்றியது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
