தமிழகம் முழுவதும் ஆக. 5 முதல் தினகரன் சுற்றுப் பயணம்: நாஞ்சில் சம்பத்!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை ஏற்றுக் கொள்கிறது எடப்பாடி கோஷ்டி. ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலர் தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது எடப்பாடி கோஷ்டி.

எம்ஜிஆர், ஜெயலலிதா வாரிசு அரசியல் செய்ததில்லை; சசிகலாவும் வாரிசு அரசியல் செய்ய கூடாது என்பது எடப்பாடி கோஷ்டியின் நிலைப்பாடு. இதனால் ஒட்டுமொத்தமாக அதிமுக நிகழ்ச்சிகளில் தினகரனை அழைப்பது இல்லை.

திவாகரனுடன் எடப்பாடி கைகோர்ப்பு

திவாகரனுடன் எடப்பாடி கைகோர்ப்பு

அதேநேரத்தில் திவாகரனுடன் இணைந்து கொண்டு தம்மை எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கிறார் என்கிறது தினகரன் தரப்பு. 60 நாட்களுக்குள் எடப்பாடி, ஓபிஎஸ் கோஷ்டிகள் கை கோர்க்கவில்லை எனில் தாம் கட்சிப் பணிகளில் தலையிடுவேன் என தினகரன் மிரட்டி வருகிறார்.

ரகசிய பேச்சுவார்த்தை

ரகசிய பேச்சுவார்த்தை

அதேபோல் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்புக்காக ரகசியப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆகஸ்ட் 5 முதல் பயணம்

ஆகஸ்ட் 5 முதல் பயணம்

இச்சந்திப்பின் போது, அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் தினகரன் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

எடப்பாடிக்கும் அழைப்பு

எடப்பாடிக்கும் அழைப்பு

இந்த நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு அனுப்பப்படும். இதை ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரது விருப்பம். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+