ஆர்கே நகரில் அமோக வெற்றி... சான்றிதழை பெற்றார் டிடிவி தினகரன்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக ராணி மேரி கல்லூரிக்கு புறப்பட்டார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கான சான்றிதழை தினகரன் பெற்றுக் கொண்டார்.
ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே அனைத்து சுற்றுகளிலும் தினகரனே முன்னிலை வகித்தார்.

மொத்தம் நடைபெற்ற 19 சுற்றுகளில் அவர் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்நிலையில் 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெற்றுவிட்டார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற ராணி மேரி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

கல்லூரிக்கு சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் ஆர்கே நகரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தினகரன் பெற்றார்.
அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications