தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்துக்கு எதிரான வழக்கின் நீதிபதி மாற்றம்!
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகளின் பணிகள் மாற்றம் செய்யப்படும்.
மதுரை கிளைக்கு அனுப்பப்பட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற பென்ஞ்சுக்கு மாற்றப்படுவார்கள். அதேபோல் சென்னையில் பணியாற்றும் நீதிபதிகள் மதுரைக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்.

நீதிபதிகள் மாற்றம்
இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

இதுவரை நீதிபதி துரைசாமி
அதன்படி தினகரன் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் மற்றும் அரசு பெரும்பான்மை நிரூபிக்க கோரும் வழக்கை விசாரணை செய்ய புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நீதிபதி துரைசாமி விசாரித்து வந்தார்.

இனி ரவிச்சந்திர பாபு
அக்டோபர் 4ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இதேபோல் தமிழக சட்ட பேரவையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றையும் நீதிபதி ரவிசந்திர பாபுதான் விசாரிக்கவுள்ளார்.

பதிவாளர் அறிவிப்பு
நீதிபதி சி.டி.செல்வம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பார். நீதிபதி கிருபாகரன் கல்வி தொடர்பான வழக்குகளை விசாரிப்பார் என்றும் உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications