சரியும் தினகரன் கோட்டை.. எம்பி வசந்தி முருகேசன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
தினகரன் ஆதரவாளராக இருந்த தென்காசி எம்பி வசந்தி முருகேசன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரனின் ஆதரவாளர் எம்பி வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களும் எம்பிக்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்பியான வசந்தி முருகேசன் தினகரன் அணியிலிருந்து விலகி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்வர் பழனிசாமியை வசந்தி முருகேசன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.பி.,க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்தே அவரது ஆதரவு எம்குழப்பமான மன நிலையில் உள்ளனர். ஏற்கனவே தொகுதியிலும் மக்கள் ஆதரவு இல்லாமல் போய்விட்டது.
இதனால் தினகரன் ஆதரவு எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மதில் மேல் பூனையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் எம்எல்ஏ ஐக்கையன் தினகரன் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிக்கு சென்றார். இந்நிலையில் எம்பி வசந்தி முருகேசனும் எடப்பாடி அணிக்கு சென்றிருப்பது தினகரன் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications