திருச்சியில் மோதிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் கோஷ்டிகள்- வீடியோ
திருச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் வெல்லமண்டி ராஜேந்திரன், வளர்மதி, குமார் எம்.பி ஆகியோரை தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை கிளப்பியது.
திருச்சி: திருச்சியில் அரசு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் காரை தினகரன் ஆதரவாளர்கள் மறித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் தலைமையில் சிலர் அமைச்சரின் காரை வழிமறித்தனர்.

மேலும் அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் 'அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை நீக்குவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். திருச்சி மாவட்ட செயலாளர், அமைச்சர் என்ற பொறுப்புகளிலிருந்து அந்த முடிவை நீங்கள் எடுத்தீர்கள். அதேபோல், மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்' என எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்த அமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் கோஷ்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.
ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால் அந்த இடமே பரபரப்பானது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications