போயஸ்கார்டனில் டிடிவி ஆதரவாளர்கள் போராட்டம்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.. கைது!
வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ்கார்டனில் போராட்டம் நடத்திய டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ்கார்டனில் போராட்டம் நடத்திய டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆதரவாளர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா வாழ்ந்த போஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பீதியடைந்துள்ள சசிகலா குடும்பத்தினர் அங்கு குவிந்துள்ளனர்.

மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தினகரனின் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். அப்போது பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் பாஜக என எழுதப்பட்ட பதாகையை செருப்பால் அடித்தனர்.
மேலும் பிரதமர் மோடியை ஆபாச வார்த்தைகளாலும் அர்ச்சித்தனர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா வீட்டின் முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆதரவாளர் ஒருவர் திடீரென தம்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த போலீசார் போராட்டம் நடத்திய தினகரனின் ஆதரவாளர்களை கைது செய்தனர். மேலும் போயஸ் கார்டன் பகுதியில் ஏராளமான போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications