தினகரனுக்கு என்ன சாமர்த்தியம்.. ரெய்டுக்கு பயந்து லாட்ஜில்..!
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தால் பறக்கும் படையினரால் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதால் வால்டாக்ஸ் சாலையில் ஒரு லாட்ஜில் வைத்து பணம் வழங்கும் பணியை தினகரன் கோஷ்டி செய்கிறதாம்.
சென்னை: பறக்கும் படையினரும், எதிர்க்கட்சியினரும் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருவதால் உஷாரான தினகரன் கோஷ்டி வால்டாக்ஸ் சாலையில் உள்ள லாட்ஜில் வைத்து பணம் விநியோகித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது. இதில் பணப்பட்டுவாடா நடப்பதாக ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் நேற்று தினகரன் தரப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடமும் புகார்கள் சென்றன.

பணம் விநியோகம் ஜரூர்
எதிர்க்கட்சியினரின் புகாரில் சிக்காமல் இருப்பதற்காக வாக்காளர்களின் மளிகை பில், காய்கறி பில் உள்ளிட்டவற்றை தினகரன் தரப்பினர் செலுத்தி வருகின்றனர். மேலும் அரசு பேருந்துகளில் நடத்துநர் மூலமும் பணம் விநியோகிப்பது நடைபெற்று வருகிறது.

அன்றாடம் சோதனை
இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் தினகரன் தரப்பினர் தலைகீழாக தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்து குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து பணம் கொடுத்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அணியினர் அம்பலம்
இந்நிலையில் தொப்பி அணிந்த சிலர் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பது போன்ற காட்சியை ஓபிஎஸ் தரப்பினர் படம் பிடித்து வெளியிட்டனர். ஆனால் தினகரனோ எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சியினர் இவ்வாறு செயல்படுவதாக பதில் குற்றம்சாட்டுகிறார்.

லாட்ஜில் பணம்
இந்த நிலையில் தினகரன் தரப்பு உத்தியை மாற்றியுள்ளது. எதிர்க்கட்சியினரும், பறக்கும் படை அதிகாரிகளும் தங்களை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருவதை அறிந்த தினகரன் தரப்பு வாக்காளர்களை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரவழைக்கிறது. அங்கு அவர்களது அடையாள அட்டையை சரிபார்த்து பெண் ஒருவர் ஓட்டுக்கு ரூ.4,000 வழங்கி வருவது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications