கட்சி வேறு குடும்பம் வேறு.... யாருக்கும் அஞ்சமாட்டேன்... தஞ்சாவூரில் கடுகடுத்த தினகரன்!
கட்சியினராக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எதிரிகளின் வலையில் விழுந்து விட வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : கட்சியினராக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எதிரிகளின் வலையில் விழுந்து விடக் கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி. தினகரனுடன் இனி வரும் காலங்களில் சேர்ந்து செயல்படப் போவதில்லை என்று மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இந்நிலையில் திவாகரனுக்கு ஆலோசனை கூறும் விதமாக தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் டிடிவி. தினகரன் பொறிந்துதள்ளியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் தினகரன் பேசியதாவது : எதிரிகளின் வலையில் யாரும் விழுந்துவிடக்கூடாது. கட்சியினரோ, குடும்பத்தினரோ யாராக இருந்தாலும் எதிரிகளின் சதியில் சிக்கி விடாதீர்கள். எனக்கு உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், எதற்கும் அஞ்சமாட்டேன். கட்சியின் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் அமமுக பற்றி தவறான கருத்தை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications