டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் - நவநீதகிருஷ்ணன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையானது என்றும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற முடிவை தலைமை தேர்தல் ஆணையம் இன்று இரவு அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா தரப்பு வக்கீல்கள் நேரில் ஆஜராகி ஆக்ரோஷமாக வாதாடினர்.

வாதம் முடிவடைந்துள்ள நிலையில் இரட்டை இலை யாருக்கு என்று தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்க உள்ளது. எம்ஜிஆர் அறிமுகம் செய்து அதிமுக தொண்டர்களின் மனதில் ஆழமாக வேர் ஊன்றிய இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று இரு அணிகளும் நம்பிக்கையாக உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், சசிகலா தலைமையிலான அதிமுகவே அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்று தேர்தல் ஆணையத்திடம் வாதம் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கே பெரும்பான்மை எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளதாகவும் கூறினார்.
சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் முன்பாக ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்துள்ளதாக கூறிய நவநீதகிருஷ்ணன், இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டிடுவார் என்று கூறினார். டிடிவி தினகரன், அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிந்துரைத்த வேட்பாளர் என்றும் கூறினார்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எந்த சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று நவநீதகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அதிமுகவின் ஆட்சிமன்றக்குழு கூடி முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications