பந்தல் காண்டிராக்டர் கொலை - 3 பேருக்கு "குண்டாஸ்"
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பந்தல் காண்டிராக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பந்தல் காண்டிராக்டர் ஆன இவரது மகன் சவுந்திரபாண்டி. இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் 7 ஆம் தேதியன்று, திண்டுக்கல் உழவர்சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல், கிருஷ்ணமூர்த்தியை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரியாவின் சகோதரர் செல்வம் உள்பட 5 பேர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய செல்வம், அவருடைய கூட்டாளிகளான கூட்டுறவு நகரை சேர்ந்த மனோஜ் , மதன்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஹரிகரனிடம் போலீஸ் சூப்பிரண்ட் சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செல்வம், மனோஜ், மதன்குமார் ஆகிய 3 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications