ரஜினி அரசியலுக்கு வரட்டும்.. ஆனா சிஸ்டம் சரியில்லன்னு எப்டி சொல்லலாம்- பாய்ந்த திண்டுக்கல் சீனிவாசன்
ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டு போகட்டும். ஆனால் சிஸ்டம் சரியில்லை என்றும் சொல்வதை தவறு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை: கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
5 நாட்களாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

தம்பிதுரை எதிர்ப்பு
அதிமுக அம்மா கட்சியின் எம்பியும் லோக் சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, யாரும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார். அதே வேளையில், நாட்டில் சிஸ்டமே சரி இல்லை என்று ரஜினி கூறியிருப்பது சரியில்லை என்று அவர் தெரிவித்தார்.

ரஜினியின் தவறு
தம்பிதுரையின் பாணியை அப்படியே பின்பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ரஜினியை விமர்சனம் செய்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய போது, யாரும் அரசியலுக்கு வரலாம் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார்.

முறைப்படி செலவு
திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் சட்டவிதியை மீறி வங்கியில் இருந்து பணம் எடுத்து வருகிறார் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே வங்கியில் பணம் கையாளப்படுவதாக தெரிவித்தார்.

சசிகலா கொடுத்த பொறுப்பு
மேலும், அதிமுக அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் தன்னை பொருளாளாராக நியமித்துள்ளார் என்று அமைச்சர் கூறினார். வங்கியின் பணப் பர்வர்த்தனைகள் வெளிப்படையாகவே இருக்கிறது என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications