திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: பேராசிரியை உட்பட 6 பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
திண்டுக்கல் அருகே தாமரைப்பட்டி என்ற இடத்தில் இன்று திருச்சியில் இருந்து வந்த கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
{ventuno}
உயிரிழந்தவர்களில் ஒருவரான கீதா என்பவர் தனியார் கல்லூரி பேராசிரியை எனக் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து திண்டுக்கல் அருகே உள்ள சொந்த ஊரான சிறுமாயங்குடிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் விபத்தில் சிக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications