மதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்!
திண்டுக்கல் லியோனி மீது மதுரையில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
திருப்பரங்குன்றம்: மதுரை சாமநத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. அத்தொகுதியில் உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

சாமநத்தம் பகுதியில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லியோனி மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
இருப்பினும் இதில் லியோனிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கற்களை வீசிய நபர்களை திமுகவினர் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications