பொய்யான விளம்பரங்களை செய்கிறார் எடப்பாடியார்.. தடுமாறி உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: 7.5% இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறிப் உளறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் இன்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 7.5% இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ரப்பர் ஸ்டாம்ப் ஒட்டுவது போல எடப்பாடியார் பொய் கூறி வருகிறார் எனத் தெரிவித்தார்.

முதலில் 7.5% இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி தான் கொண்டு வந்ததாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பின்னர், எடப்பாடியார் பொய்யான விளம்பரங்களைச் செய்கிறார் எனப் பேசினார். திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி இப்படி தடுமாற்றமாகப் பேசியதால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதா இருக்கும் வரை தனித்துப் போட்டியிடுவோம் என கூறினார். ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார். மேலும் வரக்கூடிய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் எனக் கூறுகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் சூழ்நிலை மாறும். ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தனித்து நின்றால் அதிமுக தனித்துப் போட்டியிட தயார். ஆனால் சூழ்நிலைகள் மாறுபடுகிறது. அந்தப் பக்கமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். திமுக ஆட்சி வரக்கூடாது என சொல்கின்ற அத்தனை கட்சிகளும் அதிமுகவுடன் சேரவேண்டும். இது காலத்தின் கட்டாயம். அரசியலில் எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேல்மணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications