இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்!
Recommended Video

நத்தம்: நம்ம வாஜ்பாய் தற்போது அறிவித்திருக்கும் பட்ஜெட் அருமையானது என திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேசிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டியுள்ளார்.
ஜெயலலிதா இருந்த வரை எந்த அமைச்சரின் குரலும் கேட்காத நிலையில் அவர் மறைந்த பிறகு எங்கும் அவர்களது குரல்தான் ஒலிக்கிறது என்ற நிலை வந்துள்ளது.
சரி எதையாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால், அதுவும் இல்லை. தற்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பொதுக் கூட்டம் என்ற பெயரில் உளறி கொட்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

நல்ல திட்டங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மத்தியில் ஆளும் பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தேர்தலை குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், நடுத்தரவாசிகளை கவர்ந்திழுக்கும் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளனர்.

மக்களுக்கு
இந்த நிலையில் நத்தத்தில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் தற்போது இலவசங்கள் என்ற பெயரில் வழங்கும் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

3 தவணைகள்
வாஜ்பாய் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார். மிகவும் அருமையான பட்ஜெட். நமது முதல்வர் கூட அதை பாராட்டியிருந்தார். 5 ஏக்கர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.
பென்ஷன்
அதுமட்டுமா, 60 வயதுக்கு பிறகும் ரூ. 3000 பென்ஷன் திட்டத்தையும் அறிவித்துள்ளனர். இதெல்லாம் சாதாரண விஷயமா என கேள்வி எழுப்பினார். இது போல் ஏற்கெனவே எம்பி தம்பிதுரை டெல்லியில் பிரதமர் நரசிம்மராவுடன் பேசிக் கொண்டிருப்பதாக பகீர் அளித்த நிலையில் தற்போது புதுகுண்டை திண்டுக்கல் சீனிவாசன் வீசியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications