அம்மா இருந்தப்பகூட ஆளுநர் ஆய்வு நடத்தலாம், தப்பில்லை... "டேக் இட் ஈஸி"ய்யா... திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
Recommended Video

கோவை: தமிழக ஆளுநர் கோவை மாவட்டத்தில் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
புதுவை ஆளுநர் கிரண்பேடி அங்கு முதல்வர் நாராயணசாமியின் கண்ணில் விரல் விட்டு ஆட்டாத குறையாக இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் தலையிடுவது,ஆளுநருக்குண்டான அதிகாரங்களில் இருந்து வரம்பு மீறுவது என கிரண் பேடி மீது புதுவை அரசு குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் தமிழகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார். அவர் மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழி பயின்று வருகிறார்.

களத்தில் இறங்கிய...
கடந்த திங்களன்று கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நேற்று களத்தில் இறங்கி குப்பைகளை சுத்தப்படுத்தினார்.

ஆய்வு செய்தார்
ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆளுநர் பன்வாரிலால் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் எனது ஆய்வு தொடரும் என்றார்.

திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
அரசை பாராட்ட வேண்டும் என்றால் ஆய்வு செய்தாக வேண்டும் என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள வேண்டும்.

தவறில்லை
அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் நடத்தினாலும் அது வரவேற்புக்குரியது. ஜெயலலிதா ஆட்சியின்போது கூட ஆளுநர் ஆய்வு நடத்தியிருந்தாலும் அது தவறில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications