ஓ.பி.எஸ் அணியுடன் 'வாயில்தான்' பேசுகிறோம்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஷாக் பேட்டி
சென்னை: ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறுகிறது என்கிற செய்தியாளரின் கேள்விக்கு வாயில் தான் பேசுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடுவே பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்கள் பல கடந்தும்கூட, பேச்சுவார்த்தை நடப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில், செய்தியாளர்கள் இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டனர். ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறுகிறது என்கிற செய்தியாளரின் கேள்விக்கு "வாயின் மூலம்தான் தம்பி" என பதிலளித்தார் சீனிவாசன். அவர் இவ்வாறு கூறும்போது முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. சிரிக்க கூட இல்லை. ஒருவேளை இந்த பதிலை அவர் கேலியாக சொல்லாமல், உண்மையிலேயே சீரியசாகவே சொல்லிவிட்டார் போலும் என நிருபர்கள் சிரித்துக்கொண்டனர்.
மேலும் அவர் கூறுகையில், அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து நீதிமன்றம் மட்டுமே பதில்சொல்லும். யார் மீது புகார் தெரிவித்தாலும் சந்திக்க வேண்டியது அவரவர் கடமை. இரு அணிகள் பேச்சுவார்த்தை குறித்து வெளியில் தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications