சென்னை ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் டிப்ளமோ படிப்புகள் தொடக்கம்!
சென்னை: சென்னையில் உள்ள அரசு பன்நோக்கு உயர் மருத்துவமனையில் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகள் புதியதாக தொடங்கப்பட உள்ளன.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரத்தில் இந்த சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது.
நவீன சிகிச்சை முறைகள்:
பிற மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு நவீன சிகிச்சை முறைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.
திறமையான மருத்துவர்கள்:
நவீன மருத்துவ கருவிகள் மூலம் சிறந்த அறுவை சிகிச்சை மையங்கள், நோய் தொற்று ஏற்படாதவாறு வார்டுகள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனையில் அனுபவமிக்க, திறமையான மருத்துவர்கள், துறைத் தலைவர்கள் பணியாற்றுகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு:
நோயாளிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அத்துடன் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டிப்ளமோ படிப்பு:
அரசு பன்நோக்கு மருத்துவனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. இதற்கான அனுமதி தமிழக அரசு அளித்துள்ளது. டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு சேர்க்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கம்:
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது, "அரசு பன்நோக்கு மருத்துவமனையில் 4 டிப்ளமோ படிப்புகளும், 12 சான்றிதழ் படிப்புகளும் இந்த வருடம் தொடங்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பம் ஆகஸ்டு மாதம் விநியோகிக்கப்படும் மொத்தம் 347 மாணவ, மாணவிகள் சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆண்டு படிப்புகள்:
இவை ஆண்டு படிப்புகளாகும். இதற்கு பிளஸ் 2 கல்வித் தகுதியாகும். மெடிசன் ரிக்கார்டு டெக்னாலஜி, டிப்ளமோ மெடிக்கல் லேபரெட்டரி டெக்னாலஜி, டிப்ளமோ ரேடியோ டெக்னாலஜி, டிப்ளமோ லேப் மற்றும் டைகனஸ் டெக்னாலஜி ஆகிய டிப்ளமோ படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.
குறுகிய கால சான்றிதழ் படிப்புகள்:
இ.சி.ஜி, ஆபரேஷன் தியேட்டர், டயாலிசீஸ், கார்டியோ சோனாகிராம் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, பம்ப் டெக்னாலஜி, உள்ளிட்ட 14 சான்றிதழ் படிப்புகள் விரைவில் தொடங்கப்படும். இதற்கான அறிக்கை வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications