ஆட்சியை கலைங்க ஆளுநரே! .... எடப்பாடிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு
தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் தமிழக மக்களிடம் தோல்வியடைந்து விட்டது. எனவே ஆளுநர் அரசை கலைக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் களம் கடும் போர்களமாக மாறியுள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிளவு பட்டுள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டனர்.
10 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு வியாழக்கிழமையன்று தமிழக முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர் சபையில் இல்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அவர் மக்கள் மனதில் தோற்றுவிட்டார் என்றே கூறவேண்டும். ஆட்சியை கலைக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். #DissolveTNGovt என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
|
ஆளுநருக்கு மெயில்
ஆட்சியைக் கலைக்க கோரியும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஒரு வலைஞர் மெயில் அனுப்பியுள்ளார்.
|
எம்எல்ஏக்களுக்கு சங்குதான்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் போனால் அவர்களுக்கு சங்குதான் என்று சொல்லாமல் சொல்கிறார் ஒரு வலைஞர்.
|
மறு தேர்தல்
ஜல்லிக்கட்டு நடத்திய நமக்கு மறுதேர்தல் நடத்த வைக்க முடியாதா என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
சட்டத்திருத்தம்
முதல்வர் இறந்து விட்டால் வேறு முதல்வரை தேர்தெடுக்காமல் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர்.
|
மக்கள் மனதில் தோல்வி
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயித்தாலும் பல கோடி மக்கள் மனதில் தோல்வியடைந்து விட்டார். அதன் வெளிப்பாடுதான் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பாக வெளிப்படுகிறது. அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வாங்க என்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications