சசி கோஷ்டிக்கு தொடர்ந்து கப்பம் கட்டுகிறதா மதுபான ஆலைகள்? ஐடி அதிகாரிகள் கண்காணிப்பு
சசிகலா கோஷ்டிக்கு மதுபான ஆலைகள் கப்பம் கட்டுகின்றனவா? என்பது குறித்து ஐடி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா கோஷ்டிக்கு மதுபான ஆலைகள் தொடர்ந்து கப்பம் கட்டுகின்றனவா? என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அனைத்து மதுபான ஆலைகளும் குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கு கப்பமாக கட்டி வந்தனர். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவில் தலையெடுத்தனர்.

அதிமுக ஆட்சி லகான்களை கையில் வைத்திருந்த இந்த இருவரும் இப்போது சிறைக்குப் போய்விட்டனர். இதனால் பண விவகாரங்களை தற்போது இளவரசி மகன் விவேக் மட்டுமே கவனித்து வருகிறார்.
ஏற்கனவே முதல்வர் எடப்பாடி தொடங்கி அமைச்சர்கள் பலரையும் வருமான வரித்துறை, உளவுத்துறை படுதீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு சப்ளை செய்யும் மதுபான ஆலைகள் மீது வருமான வரித்துறையின் கவனம் திரும்பியுள்ளது.
தற்போதும் மதுபான ஆலைகள் சசிகலா கோஷ்டிக்கு கப்பம் கட்டுகின்றனவா? இந்த பணம் எப்படி கொண்டு செல்லப்படுகிறது? என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் அடுத்த ரெய்டு இந்த மதுபான ஆலைகளில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications