பரபரப்பான சூழலில் சசிகலா, எடப்பாடிக்கு திவாகரன் கடிதம்: என்ன எழுதியிருக்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்திற்கே தினகரன் லஞ்சம் கொடுத்துள்ள நிலையில் திவாகரன் தனது அக்கா சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Divakaran writes to Sasi and EPS

இந்த வழக்கில் தினகரன் கைதாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தினகரனை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதற்கிடையே அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் திவாகரன் தனது அக்கா சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கட்சி மற்றும் ஆட்சியில் நானோ, என் குடும்பத்தாரோ தலையிட மாட்டோம் என்றும், இரு அணியினரும் கலந்து பேசி எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் திவாகரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Divakaran has written a letter to sister Sasikala and CM EPS at a time ADMK men want TTV Dinakaran to be sacked from the party post.
Please Wait while comments are loading...