ஏற்காடு இடைத் தேர்தல்: தி.மு.க.வுக்கு திராவிடர் கழகம் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

DK to support DMK in Yercaud by poll
சென்னை: ஏற்காடு இடைத் தேர்லில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கப்படும் என திராவிடர் கழக பொதுக் கூழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டிவனத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூடியது.

இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அ.இ.அ.தி.மு.க.வின் இரு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்று கூறிவருவதை ஏற்றுக் கொள்ள முடியது

ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூகநீதிக்கு எதிரான போக்கு, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்முறைகள், கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக, ஆளும் கட்சிக்கு அவசியம் ஒரு கடிவாளம் தேவைப்படுவது அவசியமாகின்றது.

நடைபெற உள்ள ஏற்காடு சட்டப் பேரவை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளருக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+