ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வடசென்னை மா.செ. மதிவாணன்: விஜயகாந்த்
ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயலர் மதிவாணன் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா அறிவித்துள்ளார்.

திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தமது கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் வேட்பாளராக போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் தேமுதிக தனித்தே போட்டியிடுகிறது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை போட்டியிட தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால் இதை பிரேமலதா நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications