உள்ளாட்சித் தேர்தலில் மநகூவுடன் தேமுதிக கூட்டணியா? திருமா விளக்கம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தேமுதிகதான் முடிவெடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது தேமுதிக. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த அணியே பரிதாப தோல்வியைத் தழுவியது.

இத்தோல்விக்குப் பின்னர் கடந்த சில மாதங்களாக மவுனமாக இருந்து வருகிறார் விஜயகாந்த். இதனால் அக்டோபர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுமா? என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் கூட்டாக சென்று விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து அந்த கட்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நாங்கள் மக்கள் நலக் கூட்டியக்க கட்சிகள் ஒன்றாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்றார்.
இதனால் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications