ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தேமுதிக கவுன்சிலர் கைது
விழுப்புரம்: ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தேமுதிக கவுன்சிலர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு(45). அவரது மனைவி பழனியம்மாள்(36). 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சேட்டு தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மணலூர்பேட்டையில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேட்டு குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டார்.
இந்நிலையில் அம்மா வீட்டில் இருந்த பழனியம்மாளுக்கும் மணலூர்பேட்டையைச் சேர்ந்த தேமுதிக கவுன்சிலர் சுதாகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சுதாகர் பழனியம்மாளின் வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் பழனியம்மாள் மறுக்கவே வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து அவரின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு சுதாகர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
உடலில் தீப்பிடித்தவுடன் பழனியம்மாள் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த மணலூர்பேட்டை போலீசார் சுதாகரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications