கேப்டன் ஆட்சி அமைந்தால் ரமணா ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்படும்.. பிரேமலதா
திருச்சி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் ரமணா பட ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணி உருவான கையொடு அனல் பறக்கும் பிரசாரத்தை துவங்கியுள்ளார் தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா.

இந்நிலையில், திருச்சி உறையூரில் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ''கேப்டன் ஞானபழம் அந்த பழம், இங்கு இல்லை தேனில் விழுந்த பழம். என்றைக்கும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்.
திமுகவுன் கூட்டு வைத்தால் ஈசியாக ஜெயித்திருக்கலாம் அரசனை நம்பி புருசனை விட்ட கதை தான் தேமுதிகவை விட்டு சென்றவர்களின் நிலை தான். துரோகிகள் யாரையும் தமிழகம் வாழ வைத்தது இல்லை. கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும் சரி கேப்டனை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழக போலீஸ்க்கு ரோல்மாடல் கேப்டன் தான். போலீஸ் அகாடமி பயிற்சியில் கேப்டனின் படங்களை காண்பித்து கற்றுக்கொடுக்கிறார்கள். கேப்டன் ஆட்சி அமைந்தால் ரமணா ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்படும்.
ஊழல்கள் பற்றி இமெயில் புகார் அனுப்பினால் உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்மாவை நம்புனிங்க, அய்யாவை நம்புனிங்க, இந்த ஒருமுறை இந்த அண்ணனை நம்புங்க. ஜெயலலிதா சட்டசபையில் தான் முதன் முதலில் ஆண்மகனை பாத்திருப்பார்'' இவ்வாறு பிரேமலதா பேசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications