விஜயகாந்த் கட்டுப்பாட்டில் கட்சியில்லை.. தேமுதிக நாசமாக பிரேமலதாதான் காரணம்: சந்திரகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது தேமுதிக கட்சி பிரேமலதா கட்டுப்பாட்டில் உள்ளது. தலைவருக்கு பிடிக்காத கூட்டணியை உருவாக்கியது பிரேமலதாதான் என்று கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட சந்திரகுமார் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார்.

சந்திரகுமார் கூறியதாவது: தேமுதிக கட்சி தற்போது விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை. முழுக்க அண்ணி (பிரேமலதா) கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது. அவர்தான், வைகோவிடம் அடிக்கடி பேசி, பேசி கூட்டணியை உருவாக்கினார்.

DMDK is comes under Premalatha's control says Sandrakumar

பிரேமலதாவால்தான் இந்த இயக்கம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. இன்றைக்கு சவால் விட்டு சொல்கிறேன், மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டால் எந்த தொகுதியிலும், தேமுதிக 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாது.

இந்த 10 ஆயிரம் வாக்குகளை பெற ஒவ்வொரு வேட்பாளர்களையும், 25 லட்சம் செலவிட செய்கிறீர்களே.., உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்தால் இப்படி அவர்களை பலி கொடுப்பீர்களா? என்பதுதான் எனது கேள்வி.

விஜயகாந்த் மீது இன்னும் நம்பிக்கையுள்ளது. இனியாவது கேப்டன் திருந்தட்டும், கட்சியை காப்பாற்றவாவது, திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். தமிழக மக்கள் நலனுக்காகவும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றாலும், திமுகவோடுதான், தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+