ஜெ., கருணாநிதிதானே அவங்க பேரு, அப்படித்தானே அழைக்க முடியும்.. பார்த்தா பலே கேள்வி!
தஞ்சாவூர்: மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் கூட நாம் பெயர் சொல்லித்தான் கூப்பிடுகிறோம். அப்படி இருக்கும்போது ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரையும் பெயர் சொல்லித்தான கூப்பிட முடியும். அதுதான் அவர்களது பெயர். இதில் என்ன தவறு உள்ளது என்று தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கேட்டுள்ளார்.
தஞ்சாவூர் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் பார்த்தசாரதி. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது வேண்டுமென்றே அதிமுக அரசு போட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் இது போல் அவதூறு வழக்குகள் போடுவது அரசுக்கு வீண் செலவை ஏற்படுத்துகிறது என தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.எதிர்க் கட்சிகள் மீது அவதூறு வழக்குகளைப் போடுவதை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் தினம்தோறும் நடைபெற்று வருகின்றன.
இதையெல்லாம் விட்டு விட்டு சட்ட சபையில் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவை ஜெயலலிதா என பெயரைச் சொல்லி அழைக்க கூடாது என்றும் திமுகவினர் கருணாநிதி பெயரை சொல்லி அழைக்க கூடாது என்றும் விவாதம் செய்கின்றனர். அவர்களுடைய நிஜ பெயர் அதுதானே. வாக்காளர் அட்டையில் அந்த பெயர்தானே இருக்கிறது.
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மாவையே காந்தி என பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம். ஜவர்கஹலால் நேரு, நரேந்திர மோடி என எல்லாரையும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம். சட்டசபையில் பெயரைச் சொல்லி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. பெயர்களைச் சொல்ல கூட அனுமதிக்கவில்லை என்றால் அது என்ன சட்டசபை என்றார் பார்த்தசாரதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications