தேமுதிகவின் நேர்காணலும் நாளையே.. கூட்டணி குறித்தும் 'சர்வே' நடத்துகிறார் விஜயகாந்த்!
சென்னை: யாருடன் கூட்டணி என்பதை நேரடியாகச் சொல்லாமல் வழக்கம் போல கடைசி நிமிடம் வரை சொதப்பும் உத்தியை தொடர்ந்து வரும் தேமுதிக நாளை தனது வேட்பாளர் நேர்காணலை தொடங்குகஇறது.
தேமுதிக சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் வருகிற 22ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின்போது கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ கிங், கிங் மேக்கர் என்று புரியாத பேச்சாக பேசி விட்டு, வேட்பாளர் நேர்காணலின்போது கட்சியினரிடம் கூட்டணி குறித்து கேட்டு பிறகு கருத்தை சொல்கிறேன் என்று கூறி விட்டுப் போய் விட்டார்.

நாளை முதல் நேர்காணல்
இந்த நிலையில் தேமுதிகவின் நேர்காணல் நாளை தொடங்குகிறது. நாளையே திமுகவின் நேர்காணலும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தேமுதிக ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல்,22.02.2016 முதல் 01.03.2016 வரை ஒன்பது நாட்கள் தினசரி காலை 9 மணி முதல் கழக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் நடைபெற இருக்கின்றது.

மாவட்ட வாரியாக
எனவே, விருப்பமனு அளித்துள்ளவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனு அளித்துள்ளீர்களோ, அந்த மாவட்டத்திற்கான நேர்காணல் நடைபெறும் தேதியில் வருகை தந்து நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வ

ஒரிஜினல் சாதிச் சான்றிதழ் அவசியம்
வரும்பொழுது, கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு தேவையான ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் (ORIGINAL)சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

கீழ்க்கண்ட அட்டவணைப்படி
கீழ்க்கண்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதிகளில், கீழ்க்கண்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் தேதி விவரம்: பிப்ரவரி 22 திங்கள்கிழமை -திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி

23ம் தேதி
பிப்ரவரி 23 செவ்வாய்கிழமை -தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம் பிப்ரவரி 24 புதன்கிழமை - மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை பிப்ரவரி 25 வியாழக்கிழமை - சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், மேற்கு சென்னை

26ம் தேி
பிப்ரவரி 26 வெள்ளிக்கிழமை - கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு பிப்ரவரி 27 சனிக்கிழமை - நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை - நாமக்கல், சேலம், கடலூர்

29ம் தேதி
பிப்ரவரி 29 திங்கள்கிழமை - திருச்சிராப்பள்ளி,வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மார்ச் 1 செவ்வாய்கிழமை - தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், புதுச்சேரி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications