தேர்தல் தோல்வி எதிரொலி: முரசு, மாம்பழம் சின்னங்கள் பறிபோகின்றன

தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, எந்த ஒரு கட்சியாவது அது போட்டியிடும் மாநிலத்தில் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் ஆறு சதவீதத்தைவிட குறைவாக பெற்றிருந்தால், அவை அம்மாநிலத்தில், அங்கீகாரம் இல்லாத கட்சிகளாகத்தான் கருதப்படும்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 957 வாக்குகள் பதிவாகின. இதில் ஆறு சதவீதம் என்றால் அது 24 லட்சத்து, 33 ஆயிரத்து 297 வாக்குகளாகும். 14 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த்தின் தேமுதிக 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளைதான் பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில், 5.13 சதவீதமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியிருந்தது.
இதேபோல, ராமதாசின் பாமக மொத்தம் 18 லட்சத்து, நாலாயிரத்து 812 வாக்குகளை பெற்று 4.45 சதவீத வாக்குகளை மட்டும் ஈட்டியுள்ளது. இந்த கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6.4 சதவீத வாக்குகளை எடுத்திருந்தது. இத்தேர்தல் பின்னடைவால், தேமுதிகவின் முரசு சின்னமும், பாமகவின் மாம்பழ சின்னமும் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தேமுதிக கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் கூறுகையில், " எங்கள் சின்னத்தை இழப்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை. அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உரிய நடவடிக்கையை எடுப்போம்" என்றார்.
இதேபோல ஆறு விழுக்காடு வாக்குகளை பெறாத வைகோவின் மதிமுக கட்சியும் தனது சின்னத்தை இழக்க உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications