தேமுதிக பொங்கல் விழாவில் ஜெயலலிதா குறித்து விஜயகாந்த் ஆபாச பேச்சு
வாலஜா: முதல்வர் ஜெயலலிதா குறித்து தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், தரக்குறைவாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த சுங்க சாவடி அருகே தேமுதிகவின் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வண்ணம் நாட்டுப்புற கலைஞர்களின் ஆடல் பாடல் மயிலாட்டம் , உள்ளிட்டவை இடம் பெற்ற கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் விஜயகாந்த் பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறமால் போனதற்கு அதிமுக அரசு தான் காரணம் என கூறினார். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அருவெறுக்கத்தக்கவையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிக அளவில் தொண்டர்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் இப்படி பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை விழா நடைபெறும் இடத்திற்கு விஜயகாந்தின் பாதுகாவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. தகாத வார்த்தைகளால் செய்தியாளர்களை அவர்கள் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாலாஜா காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமாராணி, செய்தியாளர்களை தாக்க முற்பட்ட விஜயகாந்தின் அடியாட்களை எச்சரித்தார். அப்போது அவருக்கும் விஜயகாந்த்தின் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications